திருச்சி ராக்கின்ஸ் ரோடு திருவள்ளுவர் பஸ் நிலையம் மற்றும் நீர்தேக்கத் தொட்டி அருகிலுள்ள தார்சாலையானது குண்டும், குழியுமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இச்சாலை வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திப்பதுடன் சிறு சிறு விபத்துகளில் சிக்கியும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.