அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் நாயகனைப்பிரியாள் கிராமத்தில் காமடி கோவில் முதல் சிவன் கோவில் வரை உள்ள சாலை கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்புமின்றி முற்றிலுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இச்சாலை வழியாக பள்ளி, சமுதாயக்கூடம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தினசரி சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் இப்பாதை சேறும், சகதியுமாக மாறுவதால் பள்ளி செல்லும் சிறுவர்களும், முதியவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.