வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-07-19 14:23 GMT

அரியலூர் அண்ணா சிலையில் இருந்து கல்லங்குறிச்சி ரவுண்டானா வரை அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனின் இருபுறமும் அதிகளவில் மணல் தேங்கி மேடு போல் காட்சியளிக்கிறது. அரசு போக்குவரத்து கழக பணிமனை, போலீஸ் நிலையம், வங்கிகள் நிறைந்த இந்த சாலையில் தற்போதைய காற்று காலத்தில் மணல் துகள்கள் அதிகளவில் காற்றில் பறக்கின்றன. இதனால் இவ்வழியாக தினந்தோறும் செல்லும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் துகள் பறந்து விழுவதால், அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, சாலையில் தேங்கியுள்ள மணலை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்