கூடலூர் அருகே துப்புக்குட்டிபேட்டை பகுதியில் பழமை வாய்ந்த பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தை கடந்துதான் கேரளம் மாநில பகுதி மற்றும் நெல்லியாளம் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பாலத்தின் இடது புறத்தில் எந்தவொரு தடுப்புகளும் இல்லை. அதே நேரத்தில் அங்கு பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அந்த பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.