வேலூர் சத்துவாச்சாரி ேபாலீஸ் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேல் பகுதியில் சிமெண்டு சிலாப் போடப்பட்டுள்ளது. அதில் ஒருசில இடங்களில் சிமெண்டு சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-சவுந்தரராஜன், வேலூர்.