சாலை பள்ளங்களை சீரமைப்பார்களா?

Update: 2026-05-31 18:20 GMT

கலவை, ஆற்காடு, வாழைப்பந்தல் செல்லும் சாலை, சமுத்திரம்-திமிரி செல்லும் சாலை மத்தியில் விநாயகர் கோவில் அருகில், போலீஸ் நிலையம் அருகில், அம்பேத்கர் சிலை எதிரில் பெரிய அளவில் தார் சாலையில் பள்ளம் உள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பலர் தவறி கீழே விழுந்துள்ளனர். அவசர தேவைக்கு ஒரு ஆம்புலன்ஸ்கூட வர முடியாத நிலையில் சாலை பழுதடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-காமராஜ், கலவை. 

மேலும் செய்திகள்