ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் வாசுகி 6-வது வீதி பிரிவின் நடுரோட்டில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. ஈரோடு பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள் இந்த வீதியின் வழியாக செல்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் இறங்கும்போது தடுமாறுகின்றனர். இதேபோல் அகில்மேடு 6-வது வீதியிலும் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த 2 பள்ளங்களையும் சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?