அருவிக்கரை ஊராட்சிகுட்பட்ட புத்தன்கடை குருசடியில் இருந்து அருவிக்கரை புண்ணியம் தச்சூருக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஜுன் ராம் ,மாத்தூர்.