விபத்து அபாயம்

Update: 2026-08-16 07:28 GMT

நாகர்கோவில் மேலப்பெருவிளை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் குழாய் இணப்புக்காக சாலையில் பள்ளம் தோட்டப்பட்டது. ஆனால் பல நாட்களாகியும் அந்த பள்ளத்தை முறையாக மூடி சாலையை சீரமைக்கவில்லை. மேலும் அந்த இடத்தில் எச்சரிக்கை பதாகைகளோ, தடுப்பு வேலிகளோ அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி குடிநீர் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை விரைந்து முறையாக மூடி சிரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெக்ஸ்,மேலப்பெருவிளை.

மேலும் செய்திகள்