கஸ்பாபேட்டை முதல் நஞ்சை ஊத்துக்குளி வரை செல்லும் சாலையில் செங்கரைப்பாளையம்-ஆண்டக்கொத்தாம்பாளையம் இடையே உள்ள சுமார் 1 கி.மீ. தூர சாலை செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாத நிலையும் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?