சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-07-19 18:05 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி நகரில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாமலும், சாலை சீரமைக்கப்படாமலும் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்