உப்பளம் அம்பேத்கர் சாலையில் இருந்து தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் செல்ல இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இந்த இணைப்பு சாலையில் வீரன்கோவில் வீதி திரும்பும் பகுதியில் சாலை போடப்படாமல் விடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சாலையை கடக்க வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.