தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பைபாஸ் அருகே வாரம் ஒரு முறை சந்தை நடக்கிறது. சந்தைக்கு வரும் நபர்கள் தங்களது மோட்டார் சைக்கிள், கார்,ஆட்டோவை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகனங்கள் செல்வதற்கு இடையூராக உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாரசந்தையை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.