மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2026-03-01 16:43 GMT

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலனை பகுதியில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இந்த மின்கம்பங்களில் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால், இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் போதிய மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்