வழிகாட்டிப்பலகை அமைக்க வேண்டும்

Update: 2026-01-04 18:24 GMT
உளுந்தூர்பேட்டை ரவுண்டானா பகுதியில் சேலம்-சென்னை சாலையில் வழிகாட்டிப்பலகை இல்லை. இதனால் சேலம்-சென்னைக்கும், சென்னை-சேலத்திற்கும் செல்லும் வாகன ஓட்டிகள் உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவுக்கு வரும்போது வழிமாறி உளுந்தூர்பேட்டை நகருக்குள் வந்துவிடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க ரவுண்டானா பகுதியில் வழிகாட்டிப்பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்