சாலை வசதி செய்து கொடுப்பார்களா?

Update: 2026-01-04 19:21 GMT

வாணியம்பாடியை அடுத்த ஓமக்குப்பம் கிராமம் அருந்ததியர் காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் வசிக்கும் பகுதிக்கு முறையான சாலை வசதி இல்லை. ஒத்தையடி பாதையில் தான் சென்று வருகிறோம். சாலை வசதி கோரி பலமுறை கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து அதிகாரி, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தப் பலனும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாங்கள் வசிக்கும் பகுதிக்கு சாலை வசதியை ஏற்படுத்தி கொடுப்பார்களா?

-அம்பேத்குமார், ஓமக்குப்பம்.

மேலும் செய்திகள்