விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள சாலைகள் குண்டும்-குழியுமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?