மதுரை நகர் தெற்கு வாசல்-அவனியாபுரம் செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், தொழிலாளர்கள் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த சாலையால் வாகன ஓட்டிகளும் அவ்வப்போது விபத்தை சந்திக்கின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?