சேலம் மாநகராட்சி 49-வது வார்டு நெத்திமேடு புத்தூர்-இட்டேரி ரோடு கொடம்பக்காடு பகுதியில் கருப்பனார் கோவில் தெரு உள்ளது. இங்கு 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பாதாள சாக்கடை கால்வாய்க்காக சாலையை தோண்டி 3 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை பணிகள் முடியவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர், முதியோர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து பணிகளை முடித்து சாலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.