வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புள்ளூருக்கு செல்லும் சுமார் 3 கி.மீ. தூரமுள்ள சாலை பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை விரைந்து சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.