கடையம் அருகே காவூர் விலக்கு- தெற்கு மடத்தூர் வரை புதிய சாலை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி ஜல்லிக்கற்கள் பரப்பப் பட்டுள்ளது. இந்த பணி பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?