நாகர்கோவிலில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாக கே.பி.ரோடு உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் டெரிக் சந்திப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பள்ளங்களை தற்காலிகமாக ஜல்லிகள் நிரப்பி சீரமைப்பதால் அவை கனரக வாகனங்கள் செல்லும்போது மீண்டும் சேதமடைந்து விடுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் சேதமடைந்த பகுதிகளை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.