கடகத்தூர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, ஓசூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலம் வழியாக சென்று வருகின்றன. பெரும்பாலான நாட்களில் இரவு நேரத்தில் இந்த மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் மேம்பாலம் இருளில் மூழ்குகிறது. இதனால் பாலத்தில் வாகனங்களில் செல்லும்போது மக்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் போதிய வெளிச்சம் இன்றி சிரமப்படுகிறார்கள். இதனால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த மேம்பாலத்தில் இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் அனைத்து மின் விளக்குகளையும் சரி செய்ய வேண்டும்.
-சேகர், தர்மபுரி.