விபத்து அபாயம்

Update: 2025-04-13 17:27 GMT

போச்சம்பள்ளி தாலுகா நாகரசம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட என்.தட்டக்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு எதிரே உள்ள சாலை பள்ளமாகவும், வேகத்தடைகள் இருபுறமும் இல்லாமலும் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதன் காரணமாக பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதிவாணன், என்.தட்டக்கல்.

மேலும் செய்திகள்