பந்தலூர் அருகே மேங்கோரேஞ்சு பகுதியில் இருந்து ஏலமன்னா பகுதி வரை சாலை செல்கிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.