கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்பு சுவர்

Update: 2025-04-06 16:59 GMT

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து உள்ளது. மலையின் கொண்டை ஊசி வளைவுகளில் ஒரு சில இடங்களில் தடுப்புசுவர் இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அப்பகுதியை கடந்து செல்கின்றனர். மேலும் ஒளிரும் பட்டைகளும், மின்விளக்குகளும் இல்லாமல் இந்த பகுதி அபாயகரமாக உள்ளது. எனவே கொண்டை ஊசி வளைவுகளில் தடுப்புசுவர் அமைத்து வாகனஓட்டிகளுக்கு பாதுகாப்பு அமைத்து தர வேண்டும்.

-கிருஷ்ணன், சேலம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது