நாமக்கல் - திருச்சி சாலையில் பொன்விழா நகர் அமைந்துள்ளது. இந்த நகருக்கு செல்ல திருச்சி மெயின்ரோட்டில் இருந்து வளைவு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவில் இருந்து சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு சாலை பழுதாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவ, மாணவிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
-விஜயன், நாமக்கல்.