பர்கூர் ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இதன் எதிரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் நடந்து, இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
-சுரேஷ், பர்கூர்.