கோவை மாநகராட்சி 18-வது வார்டு நல்லாம்பாளையம் சுப்பண்ண கவுண்டர் லே அவுட் அன்னையப்ப கவுண்டர் வீதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு மண்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்தால் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் பொதுமக்கள் வலுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.