வெண்ணந்தூர் போலீஸ் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையின் முகப்பில் இருபுறமும் விளம்பர பலகைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் நடுப்பட்டியில் இருந்து வெண்ணந்தூர் செல்பவர்களுக்கு சாலையில் கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்க இடமில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-ரமேஷ், வெண்ணந்தூர்.