காட்சி பொருளான சிக்னல்

Update: 2025-03-23 17:13 GMT

பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. அங்கிநாயனப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் சாலையை கடந்து செல்ல ஏதுவாக அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சிக்னல் அமைக்கப்பட்டிருந்து. தற்போது இந்த சிக்னல் செயல்படாமல் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் விபத்துகள் அதிகளவில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிக்னல் விளக்கை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவக்கை எடுப்பார்களா?

-யாஷ்வின், பர்கூர்.

மேலும் செய்திகள்