ஆபத்தான பாலம்

Update: 2025-03-16 16:54 GMT

பர்கூரில் இருந்து காரக்குப்பம், சிந்தகம்பள்ளி, பசுவண்ண கோவில் என்ற இடத்தில் கிருஷ்ணகிரிக்கு செல்லும் சாலையும், ஆந்திர மாநிலம் செல்லும் சாலையும் உள்ளது. சிந்தகம்பள்ளியில் பாம்பாற்றின் குறுக்கே பாலம் திறக்கப்பட்டது. தற்போது இந்த பாலம் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் பாலத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் சேதமடைந்துள்ள பாலத்தின் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாமிநாதன், பர்கூர்.

மேலும் செய்திகள்