சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-03-16 16:52 GMT

கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அமைந்துள்ளது. இங்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்குள் வரக்கூடிய பிரிவு சாலை அருகில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் எந்த நேரமும் விபத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும். அதேபோல சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி வரும் சர்வீஸ் சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க வேண்டும்.

-சதீஷ், சூளகிரி.

மேலும் செய்திகள்