பந்தலூர் அருகே பாதிரிமூலாவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. அதில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் சாலையை பயன்படுத்த முடியாத நிலை கூட ஏற்பட்டு விடுகிறது. அந்த சமயத்தில் வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அங்குள்ள மண்சாலையை தார்சாலையாக மாற்றி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.