கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் சாலையில் பல இடங்களில் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த சாலை புழுதி பறக்கும் சாலையாக மாறிவிட்டது. மேலும் பள்ளங்கள் கிடப்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுபோன்ற சம்வங்கள் இரவு நேரத்தில் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.