பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மோளையானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மோளையானூரில் இருந்து தர்மபுரி செல்லும் பிரதான சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது இந்த சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பல்லாங்குழியாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைப்பார்களா?
-பைந்தமிழ், மோளையானூர்.