குண்டும், குழியுமான சாலை

Update: 2025-03-09 16:34 GMT

பர்கூர் தாலுகா வரட்டனபள்ளியிலிருந்து தேசுப்பள்ளி காட்டூர் வரையுள்ள கிராம பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையின் இரு புறமும் புதர் மண்டி ஆபத்தான நிலையில் உள்ளது. ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் சாலை உள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும்.

-கதிரவன், பர்கூர்.

மேலும் செய்திகள்