பிரதான சாலையில் பைக் சாகசம்

Update: 2025-03-09 16:33 GMT

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாகும். இந்த சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து வருவோர் பைக் வீலிங், சாகசத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக 150 கிலோ மீட்டர் வேகத்திற்கும் மேலாக இந்த சாலையில் சென்று பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறார்கள். அதனால் இது தேசிய நெடுஞ்சாலையா? அல்லது பைக் சாகசம் நடைபெறும் இடமா? என்ற சந்தேகம் வருகிறது. எனவே ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடங்களில் போலீசார் கண்காணித்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்