கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் அருகில் தற்போது ஏராளமான இரவு நேர உணவு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக லாரிகள், சரக்கு வாகனங்களின் டிரைவர்கள் சர்வீஸ் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி சாப்பிட செல்கிறார்கள். இதனால் சர்வீஸ் சாலையில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கும் மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் விபத்துகளும் நடக்க வாய்ப்புகள் உள்ளன. ஆகவே பஸ் நிலையம் அருகில் இரவு நேர உணவு கடைகள் வைக்கும் பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புவனேஸ், சூளகிரி.