கோவை பாப்பநாயக்கன்பாளையம் கந்தசாமி லே அவுட் பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. இதனால் அந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்க்கும் சூழல் உள்ளது. எனவே அந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.