சேலம் மரவனேரியில் இருந்து அணைமேடு செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். மேலும் அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் வர்ணம் தற்போது மங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையை அதிகாரிகள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-ராஜா, சேலம்.