வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து அனந்தகவுண்டபாளையம் செல்லும் சாலையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையின் இருபுறங்களிலும் மரம், செடி, கொடிகளால் சூழப்பட்டுள்ளது. இவ்வழியாக அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரம், செடி, கொடிகளை அகற்றி இடையூறு இல்லாமல் போக்குவரத்து நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பாரத், வெண்ணந்தூர்.