உக்கடத்தில் புதிய பாலம் முடியும் இடம் முதல் குறிச்சி குளம் பகுதிக்கு ஏறும் இடம் வரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.