சேலம் பழைய பஸ் நிலையம் முதல் டவுன் போலீஸ் நிலையம் வரை உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது நகரின் முக்கிய பகுதி என்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோவில் முன்பு சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலையை விரைந்து சீரமைக்கப்படுமா?
-வேலாயுதம், சேலம்.