வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோம்பை காடு மலைப்பகுதியில் இருந்து தச்சங்காடு வரும் தார்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் சைக்கிளில் செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். மேலும் இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன், கோம்பை காடு.