அவசியம் வேகத்தடை

Update: 2025-02-23 16:56 GMT

மல்லசமுத்திரம் ஒன்றியம் கோட்டப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் எதிரே வையப்பமலை–-மல்லசமுத்திரம் சாலை செல்கிறது. இந்த சாலை பல்வேறு கிராமங்களை இணைக்கும் இணைப்புசாலை என்பதால், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு வருகின்ற வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு அரசு பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராகுல், கோட்டப்பாளையம்.

மேலும் செய்திகள்