அரூர் பஸ் நிலையத்திற்கு வரும் அரசு, தனியார் பஸ்கள் அனைத்தும் வேகமாக வருகின்றன. இதனால் அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள்ளே இருந்து வெளியே வரும் நெடுஞ்சாலையில் 2 இடங்களில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-சாமி, அரூர்.