பந்தலூர் அருகே சின்ன ஒலிமடா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதை உடைந்து மேடு, பள்ளமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த நடைபாதையை புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.