மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட ராயக்கோட்டை சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த சாலையில் 4 வங்கிகள், ஒரு அரசு பள்ளி உள்ளது. நீண்ட நாட்களாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கர், மாரண்டஅள்ளி.