மொரப்பூர் சிந்தல்பாடி கிராமத்தின் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மொரப்பூரிலிருந்து ஆவலம்பட்டி, அப்பியம்பட்டி வழியாக சிந்தல்பாடிக்கு செல்லும்போது ரெயில்வே மேம்பாலம் வருகிறது. இந்த பாலத்தின் இணைப்பு பகுதியில் இருபுறமும் 2 அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்படாமல் மணல் தரை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வருவோருக்கு மணல் தரை இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேம்பாலத்தின் இரு பக்கவாட்டிலும் சுமார் 20 அடி பள்ளம் உள்ளது. எனவே ரெயில்வே மேம்பால சாலையின் இருபுறமும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவப்பிரகாசம், அப்பியம்பட்டி.